பாக்ஸ் ஆபீஸில் தடுமாறும் திரிப்தி டிம்ரி, மிருணாள் தாகூர் படங்கள்

சென்னை,
கடந்த 1-ம் தேதி ”தடக் 2” மற்றும் ”சன் ஆப் சர்தார் 2” ஆகிய இரண்டு இந்தி படங்கள் வெளியாகின. ஒன்றில் ”அனிமல்” நடிகை திரிப்தி திம்ரியும், மற்றொன்றில் மிருணாள் தாகூரும் நடித்திருக்கிறார்கள்.
இதில் “சன் ஆப் சர்தார் 2” ஒரு வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக இருந்தபோதிலும், வலுவான பாக்ஸ் ஆபீஸ் வசூலை பதிவு செய்யத் தவறிவிட்டது.
இப்படம் இரண்டு நாட்களில் வெறும் ரூ.14 கோடியை மட்டுமே வசூலித்திருக்கிறது. இது பாலிவுட்டில் மிருணாள் தாகூருக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.
மறுபுறம், ”அனிமல்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரிப்தி திம்ரி நடித்திருக்கும் படம் தடக் 2. இப்படம் தமிழில் வெளியான பரியேறும் பெருமாள் பத்தின் ரீமேக் என்பதால் ஒரு நல்ல தொடக்கத்தை பெறும் என்று பலர் எதிர்பார்த்தநிலையில், வலுவான ஓபனிங்கை பதிவு செய்யத் தவறிவிட்டது. இப்படம் இரண்டு நாட்களில் ரூ.6 கோடியை மட்டுமே வசூலித்தது.