பாக்யஸ்ரீ போர்ஸின் ’ஆந்திரா கிங் தாலுகா’…ரிலீஸ் தேதி மாற்றம்|Andhra King Taluka movine release date change

சென்னை,
மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ”ஆந்திரா கிங் தாலுகா” படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஒரு ரசிகரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்
இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது படக்குழு அதனை மாற்றி உள்ளது. அதன்படி, 28-க்கு பதில் 27-ம் தேதியே இப்படம் திரைக்கு வர உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. கர்னூலில் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது.






