பவன் கல்யாணின் “ஓஜி” பட டிரெய்லர் ரிலீஸ் எப்போது.. வெளியான தகவல்!

பவன் கல்யாணின் “ஓஜி” பட டிரெய்லர் ரிலீஸ் எப்போது.. வெளியான தகவல்!


பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘ஓஜி’ திரைப்படத்தில் ‘கண்மணி’ கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது‘

இதற்கிடையில் இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை நாளை அதிகாலை 1 மணியளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *