பழைய வீடியோவால் வந்த பிரச்சினை.. நடிகர் சோனு சூட் மீது பாயும் நடவடிக்கை

தென்னிந்திய சினிமா படங்களில் வில்லனாக மிரட்டி வரும் நடிகர், சோனு சூட். தமிழில் ‘ஒஸ்தி’, ‘தேவி’, ‘மதகஜராஜா’ படங்களிலும் நடித்துள்ளார். இதில் ‘மதகஜராஜா’ படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ‘ஹிட்’ அடித்தது.
சினிமாவில் வில்லனாக இருக்கும் சோனு சூட், நிஜத்தில் பல நல்ல விஷயங்கள் செய்து வருகிறார். ஏழை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறார். ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களையும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் சோனு சூட் சில வருடங்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது ஸ்பிட்டி வேலி பகுதியில் அவர் எடுத்த வீடியோக்கள் தற்போது வெளியாகி, பிரச்சினையை இழுத்துவிட்டுள்ளது. அந்த வீடியோவில் அவர் ‘ஹெல்மெட்’ இல்லாமலும், வெறும் டவுசர் அணிந்துகொண்டும் மோட்டார் சைக்கிள் ஓட்டியது சர்ச்சையாகி இருக்கிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அழுத்தம் வந்துகொண்டிருக்கிறது.
இதனால் போக்குவரத்து போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். விரைவில் சோனு சூட்டுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.