பழிக்குப் பழி… ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா

பழிக்குப் பழி… ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா


படுகொலை செய்யப்பட்ட தளபதி தொடர்பில் பழிவாங்கும் விதமாக உக்ரைன் மீது அதிபயங்கர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை புடின் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை


உக்ரைன் தலைநகர் கீவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்தே, தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதன் தாக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பழிக்குப் பழி... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா | Putin Launches Hypersonic Missile Strikes

குறித்த தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ரஷ்யாவின் மிக முக்கியமான தளபதி ஒருவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பழிவாங்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கீவ் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்பு வளாகங்களுக்குள் தீ பரவிய நிலையில மக்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பழிக்குப் பழி... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா | Putin Launches Hypersonic Missile Strikes

இதனிடையே Holosiivskyi பகுதியில் 630 குடியிருப்பு கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு மேலும் 16 மருத்துவமனைகள், 17 பள்ளிகள் மற்றும் 13 மழலையர் பள்ளிகள் வெப்பமூட்ட முடியாமல் போயுள்ளன.

ஒட்டுமொத்தமாக 60,000 மக்கள்

ஒட்டுமொத்தமாக 60,000 உக்ரைனிய மக்கள் உயிர் உறையும் கொடும் குளிரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளனர். Shevchenkivsky மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பழிக்குப் பழி... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா | Putin Launches Hypersonic Missile Strikes

இதனிடையே, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்யாவின் ஏவுகணைகளை தடுத்து நொறுக்கியதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் திங்களன்று படுகொலை செய்யப்பட்ட தளபதி Igor Kirillov.

தற்போது அவரது படுகொலைக்கு பழிவாங்கும் விதமாகவே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் ரஷ்யா உக்ரைனை உலுக்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *