‘பறந்து போ’ – ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு ரிவ்யூ கொடுத்த ”டூரிஸ்ட் பேமிலி” இயக்குனர்|Just watched the brilliant film Paranthu Po by Ram sir -Abishan Jeevinth

‘பறந்து போ’ – ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு ரிவ்யூ கொடுத்த ”டூரிஸ்ட் பேமிலி” இயக்குனர்|Just watched the brilliant film Paranthu Po by Ram sir -Abishan Jeevinth


சென்னை,

‘பறந்து போ’ படத்தை பார்த்து இதயம் நிறைந்துவிட்டதாக டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கூறினார்.

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது

இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ரிவ்யூ கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

“இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை, உணர்வுகளை அருமையாக கையாண்டுள்ளார். மனதில் நிற்கும் இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *