‘பராசக்தி’ பட தலைப்பு விவகாரம் | ‘Parasakthi’ film title controversy

‘பராசக்தி’ பட தலைப்பு விவகாரம் | ‘Parasakthi’ film title controversy


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிட்டுள்ளதை படக்குழு டைட்டில் டீசர் வெளியிட்டு அறிவித்தது.

அதேபோல, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ”சக்தித் திருமகன்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் இப்படத்திற்கு ‘பராஷக்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இப்படங்கள் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி கடந்த ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ‘பராஷக்தி’ என்ற தலைப்பை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சான்றிதழை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தன்னிடமுள்ள ‘பாரசக்தி’ தலைப்பை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்ததாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் இந்த தலைப்பு யாருக்கு சொந்தமானது என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *