“பராசக்தி” படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவரா? – மனம் திறந்த சுதா கொங்கரா | Was this the actor who was initially supposed to star in the film “Parasakthi”?

சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘பராசக்தி’ படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பராசக்தி படத்தை ஆரம்பத்தில் ‘புறநானூறு’ என்ற பெயரில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காலகட்டத்தில் அவருக்கு கதையையும் சொன்னேன். ஆனால், தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதற்கான தேதிகள் கிடைக்காத காரணத்தால், அவர் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது” என்று சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.






