’பராசக்தி’ படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு…வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரவி மோகன்|Ravi Mohan Thanks Fans for the Love and Respect Received Through Parasakthi

’பராசக்தி’ படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு…வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரவி மோகன்|Ravi Mohan Thanks Fans for the Love and Respect Received Through Parasakthi


சென்னை,

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ள ’பராசக்தி’ திரைப்படம், திரையரங்குகளில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. கதைக்களம், சமூக கருத்து, நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில், ரவி மோகன் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.

பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

“பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் ‘திரு’ கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது .உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன். 2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

பராசக்தி திரைப்படத்தின் வெற்றி, ரவி மோகனின் திரையுலகப் பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *