“பராசக்தி” படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த அதர்வா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக ‘பராசக்தி’ திரைக்கு வந்துள்ளது. சென்சாரில் இந்தப் படத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. ‘பராசக்தி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தில் சின்னதுரை கதாபாத்திரத்தில் நடித்த புகைப்படங்களை நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






