பம்பர் ஆபர் பெற்ற நடிகை… துல்கர் படத்தில் இந்த கதாநாயகியா?|will ruhani sharma play the heroine in dulquer salmaans new film

சென்னை,
லக்கி பாஸ்கர் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் , தெலுங்கு இயக்குனர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘ஆகாசமோல் ஓகா தாரா’ என பெயரிடப்பட்டுள்ளது.
”ஆகாசம்லோ ஓகா தாரா” படத்தில் ஏற்கனவே சாத்விகா வீரவள்ளி கதாநாயகியாக நடிக்கும்நிலையில், தற்போது ருஹானி சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டோலிவுட் துறையில் இடைவிடாத படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இந்த நடிகைக்கு, இப்போது துல்கர் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இது அவருக்கு கிடைத்த பம்பர் ஆபர் என்றே கூறலாம்.