'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் அப்டேட்

'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் அப்டேட்


சென்னை,

பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு ‘பன் பட்டர் ஜாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்குகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இறந்த கால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக் கொள்ளும் புதிய தலைமுறை இளைஞர்களைப் பற்றிய கதைதான் இந்த ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம்.

“வாழ்க்கையில் பலர் கடந்தகாலத்தை சுமந்து கொண்டே நிகழ்காலத்தை வாழ தவறி விடுகின்றனர். அப்படி இல்லாமல் அந்த கணத்தை அப்போதே வாழ்ந்து விடுவதுநல்லது என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது. இந்தப் படத்தில், ஒரு கருத்தை உருவகமாக சொல்வதற்கு ஓர் உணவுப் பொருள்தேவைப்பட்டது. அதனால் பன் பட்டர் ஜாமை தேர்வு செய்தோம்.” என்று இயக்குநர் ராகவ் மிர்தாத் கூறியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் போருக்கு மத்தியில் ராஜு பன்பட்டர் ஜாம் சாப்பிடும் படியான காட்சி இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகும்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *