“பணத்த காட்டுனா மயங்கிருவேனா?’’ – புகையிலை விளம்பரத்தை நிராகரித்த ‘தர்பார்’நடிகர்

சென்னை,
புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக ரூ.40 கோடி தருவதாகக் கூறியும் அதை நிராகரித்ததாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி, தமிழில் ரஜினியின் ‘தர்பார்’, 12 பி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நேர்மையும் குடும்பத்தின் கொள்கைகளும் பணத்தை விட முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், “ஒரு புகையிலை விளம்பரத்தில் நடிக்க ரூ.40 கோடி ஆஃபர் வந்தது. பணத்தை காட்டினால் மயங்கிவிடுவேன் என நினைத்தீர்களா என கேட்டேன். அந்த பணம் தேவை தான். அதற்காகவெல்லாம் நடிக்க மாட்டேன். என் மகன், மகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்ய மாட்டேன். அதற்கு பிறகு, அதுபோன்ற விளம்பரத்திற்காக யாரும் என்னை நெருங்குவதில்லை’’ என்றார்.






