பட விழாவில் கண்கலங்கிய நடிகை அனுபமா…இதுதான் காரணமா?|Actress anupama parameswaran emotional while paradha movie promotions

பட விழாவில் கண்கலங்கிய நடிகை அனுபமா…இதுதான் காரணமா?|Actress anupama parameswaran emotional while paradha movie promotions


சென்னை,

”பரதா” பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை அனுபமா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அனுபமா தனது புதிய படமான ”பரதா”வின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினருடன் விஜயவாடாவிற்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் என்றென்றும் மறக்கமுடியாததாக இருக்கும் என்று கூறினார். மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக தான் மிகவும் கடினமாக உழைத்ததாகவும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதானது அல்ல என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அப்போது அவர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சங்கீதா மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *