பட புரமோஷனில் நாக சைதன்யாவுடன் கலந்துகொள்கிறாரா சமந்தா? |Samantha Shuts Down Rumours Of Promoting Yeh Maaya Chesave With Naga Chaitanya

சென்னை,
வருகிற ஜூலை 18-ம் தேதி நாக சைதன்யா-சமந்தா நடித்த ”யே மாயா சேசாவே” படம் திரையரங்குகளில் ரீ-ரிலீசாக இருக்கும்நிலையில், இப்படத்தின் புரமோஷனில் நாக சைதன்யாவுடன் சமந்தாவும் கலந்துகொள்ள உள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. இந்நிலையில், படத்தின் புரமோஷனில் கலந்துகொள்வதாக பரவி வரும் வதந்திகளுக்கு சமந்தா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சமந்தா பேசுகையில், ” இல்லை, நான் யாருடனும் ”யே மாயா சேசாவே”வை விளம்பரப்படுத்தவில்லை. உண்மையில், நான் படத்தை விளம்பரப்படுத்தவே இல்லை. இந்தப் பேச்சு எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.