பட நிகழ்வில் ஸ்ரீதேவியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட குஷி கபூர்

பட நிகழ்வில் ஸ்ரீதேவியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட குஷி கபூர்


மும்பை,

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்திய சினிமாவின் ‘முதல் பெண் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டவர். இவர் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார், இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில், குஷி கபூர் தற்போது தமிழில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார். ‘லவ்யப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் , இதில் அம்மா கலந்து கொண்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்று கேட்டதற்கு, குஷி கபூர் உணர்ச்சிவசப்பட்டு, கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்தார். “நான் உணர்ச்சிவசப்படுகிறேன். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை’ என்றார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *