பட்டம் பெற்ற மகள்.. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் நெகிழ்ச்சி பதிவு

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் – சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும் ஏஆர் அமீன் என்ற மகனும் உள்ளனர். இதில் கதீஜா இசையமைப்பாளராகவும், ஏஆர் அமீன் பாடகராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரையுலகில் சம்பந்தப்படாமல் இருக்கும் ரஹீமா தற்போது சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் படிப்பை முடித்துள்ள நிலையில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிலையில் மகள் கல்லூரி படிப்பு முடிந்ததும் பட்டம் பெற்றுள்ளதை, தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘ஒரு தந்தையாக நான் பெருமை அடைகிறேன்’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.