படிப்புக்கும், நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை – நடிகை அனுபமா பரமேஸ்வரன்

படிப்புக்கும், நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை  – நடிகை அனுபமா பரமேஸ்வரன்


தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார், இப்படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது பள்ளி பருவ நினைவுகள் குறித்து நடிகை பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என் பள்ளியில், முதலிடம் பிடிக்கிறவங்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நன்றாக படிப்பவர்களால் தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணி சொல்ல முடியும்.

அது என் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால், நான் பள்ளியில் டாபர் இல்லை. இதனால் நடிக்க முடியாது என்ற பயத்தால் நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன். பின் நான் வளர்ந்த பிறகு தான் படிப்புக்கும், நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரியவந்தது” என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *