படித்த கல்லூரியின் வகுப்பறையில்….செல்பி எடுத்த லோகேஷ் – வைரல்|Back to where all the learning began

கோவை,
”கூலி” படத்தின் புரமோஷனில் தற்போது லோகேஷ் கனகராஜ் பங்கேற்றிருக்கிறார். படம் ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படக்குழு தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், லோகேஷ் கனகராஜ் கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரிக்கு புரமோஷனுக்காக சென்று இருக்கிறார். இது அவர் படித்த கல்லூரி ஆகும்.
இதனால், தனது வகுப்பறையில் தனது பெஞ்சில் அமர்ந்து லோகேஷ் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”கூலி” படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.