படப்பிடிப்பில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் காயம்

ஐதராபாத்,
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு படப்பிடிப்பின்போது லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் உடலை மெருகேற்றி வருகிறார்.
இதற்கிடையில், ஒரு விளம்பர படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவனை சிகிச்சைக்கு பின் அவர் ஓய்வெடுத்து வருகிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து ஜூனியர் என்.டி.ஆரின் குழு வெளியிட்டுள்ள பதிவில், ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நலமாக இருப்பதாகவும், காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும் தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், அடுத்த சில வாரங்களுக்கு மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.