படப்பிடிப்பில் இயக்குனருக்கு பளார் – வைரலாகும் வீடியோ

பிரயாக்ராஜ்,
திருமணம் தாண்டிய உறவு குறித்த பாலிவுட் படமான `பதி பத்னி அவுர் வோ’ திரைப்படத்தின் 2வது பாக படப்பிடிப்பின்போது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் காருக்குள் கதாநாயகன் கதாநாயகியை வைத்து படப்பிடிப்புநடத்தியபோது, இயக்குனருக்கு பளார் விட்டு படக்குழுவினரை உள்ளூர் மக்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“பதி பட்னி அவுர் வோ” கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும், இது 1978-ம் ஆண்டு அதே பெயரில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். இதில் கார்த்திக் ஆர்யன், பூமி பெட்னேகர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் நடித்தனர்.
தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடாசர் அஜீஸ் இயக்குகிறார், இதில் ஆயுஷ்மான் குரானா , சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்






