படத்தை பார்க்க சொல்லி யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ராஷ்மிகா மந்தனா, No one forced anyone to watch the movie

படத்தை பார்க்க சொல்லி யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ராஷ்மிகா மந்தனா, No one forced anyone to watch the movie


தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ராஷ்மிகா மந்தனா, ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவையும் தொட்டதில் இருந்து ‘பான் இந்தியா ஸ்டார்’ ஆக மாறி போயிருக்கிறார்.

வசூல் சாதனைகள் நிகழ்த்தினாலும், ‘அனிமல்’ படத்தை பற்றிய சர்ச்சைகள் மட்டும் போகவில்லை. குறிப்பாக ரன்பீர் கபூர் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், ராஷ்மிகாவின் கவர்ச்சிகரமான காட்சிகள் குறித்து விமர்சிக்கப்பட்டுதான் வருகின்றன.

இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து ராஷ்மிகா ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது. படத்தில் ஹீரோ புகைபிடிக்கிறார் என்றால், அவர் எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிறார் என்று அர்த்தமாகி விடாது. அப்படி நினைத்தால் அதுபோன்ற படங்களை பார்க்காதீர்கள். இங்கே படத்தை பார்க்க சொல்லி யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு துறை. எல்லாவற்றையும் விமர்சிப்பது சரியாகாது.

நான் திரையில் புகைபிடிப்பது போல நடிக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மோசமான நபர் ஒளிந்திருப்பார். அதை ‘அனிமல்’ படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா வெளிக்காட்டியுள்ளார், அவ்வளவுதான். இதற்கு மேல் இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *