படத்தில் இந்த ஒரு விஷயத்தை நான் செய்ததே கிடையாது: சாய் பல்லவி ஓபன் டாக்

சென்னை,
பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழகத்தை சேர்ந்த சாய் பல்லவி, தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு சினிமாவில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்துவரும் சாய்பல்லவி பொது நிகழ்ச்சிகளில் கூட பாரம்பரியமாக சேலை அணிந்தவாறே வருவதை பார்க்க முடியும்.
தற்போது தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ள சாய் பல்லவி, பான் இந்தியா படமாக உருவாகி வரும் சீதா ராம் படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. படத்தில் பெரும்பாலும் மேக் அப் இல்லாமலே நடிப்பதாக அதில் கூறியிருக்கிறார். தனது முதல் படத்தில் இருந்தே மேக் அப் இன்றியே நடித்து வருவதாகவும் அதிகபட்சமாக ஐ லைனர் மட்டுமே பயன்படுத்தியுள்ளேன் என்றும் சாய் பல்லவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சாய் பல்லவியின் இந்த பேட்டி மீண்டும் வைரல் ஆகி வரும் நிலையில், அழக்கு எதற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று இணையத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.