படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைத்தது ஏன்? தனுஷ் விளக்கம்|Why was the film named ‘Idli Kadai’? Dhanush explains

படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைத்தது ஏன்? தனுஷ் விளக்கம்|Why was the film named ‘Idli Kadai’? Dhanush explains


சென்னை,

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கும்நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தனுஷ், படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்க காரணம் என்ன என்பதை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,

”எங்கள் கிராமத்திலும், சென்னையிலும் நான் சந்தித்த மற்றும் என்னைப் பாதித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனையாக உருவாக்கியதுதான் இந்த ‘இட்லி கடை’. இன்னும் பவர்புல்லான டைட்டில் வைத்திருக்கலாமே என்று கேட்கலாம்.. ஒரு சில படத்தில் ஹீரோ பெயரையே டைட்டிலாக வைப்பார்கள். இந்தப் படத்திற்கு இட்லி கடைதான் ஹீரோ” என்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், பிரிகிடா சாகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *