நோய் பாதிப்பால் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய நடிகர்

சென்னை,
இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபிநய். இந்தப் படத்தில் அபிநயுடன் தனுஷ், ஷெரின் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் அபிநய், தனுஷ், ஷெரின் என மூவருக்குமே ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார் அபிநய்.
இந்நிலையில், ‘லிவர் சிரோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அபிநய். இவர், விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.