‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறிய நடிகை ருக்மணி வசந்த்

கன்னட திரை உலகில் அறிமுகம் ஆகி விஜய் சேதுபதியுடன் ஏஸ், சிவகார்த்திகேயனுடன் மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தொடர்ந்து தெலுங்கு திரை உலகிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் செட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 என்ற படத்திலும் ருக்மணி வசந்த் நடித்துள்ளார். வருகிற 1-ந்தேதி படம் திரைக்கு வருவதை தொடர்ந்து படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில் ருக்மணி வசந்த் இந்திய அளவில் நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படுகிறார்.
அவரின் இயல்பான அழகு, எளிமையான நடைமுறை, ஆழமான பார்வை இவரை “நேஷனல் கிரஷ்” பட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது.