நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘உப்பு கப்புரம்பு’

சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து, ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்திலும், அக்கா என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதற்கிடையில், இயக்குனர் சசி இயக்கத்தில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு வசந்த் மரியங்கண்டி கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிகர் சுகாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 90 களில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் படக்குழு கடைசி நேரத்தில் இந்த படத்தினை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற ஜூலை 4-ம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.