நெருக்கமான காட்சிகளில் நடிக்கிறாரா பிரபாஸ்?|Will Prabhas agree to intimate sequences in ‘Spirit’

சென்னை,
‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாரா? என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது.
“அர்ஜுன் ரெட்டி”, “ஆனிமல்” போன்ற படங்களை பார்க்கும்போது இது ஒரு அங்கமாகவே சந்தீப் ரெட்டி வங்காவின் படத்தில் இருக்கிறது. இருப்பினும், பிரபாஸ் தனது கெரியரில் ஒருபோதும் அவ்வளவு நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லை. எனவே, இப்படத்தில் பிரபாஸ் முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபாஸுக்கும் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கும் இடையிலான முதல் படம் “ஸ்பிரிட்”. இதில், பிரபாஸ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்கிறார். இப்படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,