நெமிலி பாலா பீடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம்

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் நேற்று பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து, அவர் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாலா கவச நூலை பரிசாக வழங்கினார். தொடர்ந்து குருஜி பாபாஜி தாம் எழுதிய அன்னை பாலா நூலை அவருக்கு அன்பளிப்பாக அளித்தார்.
இதையடுத்து பாலா பீட நிர்வாகி மோகன்ஜி அன்னை பாலாவுக்கு தீபாராதனை செய்தார். பாலா பீட செயலாளர் முரளிதரன் வந்திருந்த அனைத்து பாலா பக்தர்களை வரவேற்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.