நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு | “Are you even a god? I worshipped you with so many prayers and rituals!

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு | “Are you even a god? I worshipped you with so many prayers and rituals!


சென்னை,

2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் செல்வராகவன். இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய சிறந்த திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நின்றும் பிரபலமாகவே இருக்கிறார். தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி மாலை நேரத்து மயக்கம் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் ஒரு கிசுகிசு கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.

இந்த நிலையில், செல்வராகவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.” என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையில் செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் என்ன பிரச்சினை? திடீரென்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை நீக்க என்ன காரணம் என்று பல கோணத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *