‘நீதித்துறைக்கு நன்றி..’ – நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட பதிவு | ‘Thank you to the judiciary..’

மதுரை,
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட மதுரை ஐகோர்ட்டு அமர்வு தடை விதித்தது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“திருப்பரங்குன்றத்தில் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு மிக்க நன்றி. அமைதி, பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பது போன்ற சில உண்மைகளை அங்கீகரிக்க போராடுவதற்கான அவசியம் ஒருபோதும் இருந்திருக்கக் கூடாது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.