”நீண்ட நாள் நீடிக்காது.. எல்லாம் கொஞ்ச காலமே” – சமந்தா|”It won’t last long.. everything is short”

சென்னை,
நடிகையாக இருப்பது நீண்ட காலம் நீடிக்காது என்றும், அதன்மூலம் கிடைக்கும் புகழ், பாப்புலாரிட்டி எல்லாம் கொஞ்ச காலம் மட்டுமே இருக்கும் எனவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
ஐஐஎம் இந்தியா தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, “நடிகை வாழ்க்கை நீண்டதல்ல. புகழ், ரசிகர் பட்டாளம் போன்றவை சிறிது காலம் மட்டுமே. ஒரு நடிகையாக உயரும்போது, அதற்குப் பின்னால் நிறைய அதிர்ஷ்டமும், அருளும் உள்ளது. எனது வாழ்க்கையில் ஒரு நடிகையாக இருப்பதை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதை உணர்ந்துகொள்வது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது” என கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் ”குஷி” படத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் பிறகு எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. சமீபத்தில் “சுபம்”என்ற படத்தை தயாரித்து அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.