நீச்சல் உடையில் கலக்கும் ‘3 பி.எச்.கே.' பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்

பெங்களூரு,
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்த ‘3 பி.எச்.கே.’ படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ‘ஹிட்’ அடித்தது.இந்த படத்தில் குனிந்த தலை நிமிராத கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், சைத்ரா ஜே.ஆச்சர். பெங்களூருவைச் சேர்ந்த இவர், கன்னடத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், போட்டோஷூட் நடத்தினால் அதற்கு நேர்மாறாக கலக்கக்கூடியவர்.அந்தவகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. நடிகையின் இன்னொரு முகத்தைக் கண்டு ரசிகர்கள் ‘கமெண்ட்’டுகள் மூலம் தங்கள் குஷியைத் தெறிக்க விடுகிறார்கள்.






