நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் – நடிகர் அஜித்குமார், I am committed to fulfilling the trust you have placed in me

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் – நடிகர் அஜித்குமார், I am committed to fulfilling the trust you have placed in me


சென்னை,

துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 3-ம் இடம் பிடித்தது. இதையொட்டி அஜித்குமாருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

துபாய் கார் பந்தய ரேசின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும், எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *