நிவின் பாலி நடிக்கும் “பேபி கேர்ள்” படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இது தவிர தமிழில் நிவின் பாலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நிவின் பாலி ‘பேபி கேர்ள்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தொடங்கியது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். அருண் வர்மா சுரேஷ் கோபி, பிஜூ மேனன் நடிப்பில் உருவான கருடன் படத்தை இயக்கியுள்ளார். பாபி மற்றும் சஞ்சய் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் படப்பிடிப்பு நடைபெற்றது. லிஜோமோல் ஜோஸ், அதிதி ரவி, சங்கீத் பிரதாப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘பேபி கேர்ள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நாளை காலை 10.10 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.