நியூசிலாந்தில் 7,000 ஏக்கர் நிலத்தை மோகன் பாபு?

சென்னை,
‘கண்ணப்பா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மோகன் பாபு தனது மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவுக்காக நியூசிலாந்தில் 7,000 ஏக்கர் நிலம் வாங்குவது குறித்து பேசும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த கருத்துகள் நகைச்சுவையாக சொல்லப்பட்டவை என்று நடிகர் பிரம்மஜி தெளிவுபடுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், யாரும் எந்த நிலத்தையும் வாங்கவில்லை. அந்த வீடியோ முற்றிலும் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” இவ்வாறு தெளிவுபடுத்தினார்.
வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘கண்ணப்பா’ . இதில், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், அக்சய் குமார், மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.