நிதினின் "தம்முடு" டிரெய்லர் வெளியீடு

சென்னை,
ஜூலை மாதம் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு படங்களில் ஒன்று, தம்முடு. நிதின் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கவுடா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். ஜூலை 4 -ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் ”கிங்டம்” படம் தள்ளிப்போன காரணத்தால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூலை 4 அன்று ”தம்முடு” படம் திரைக்கு வரும் என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தம்முடுவில் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா, சவுரப் சச்தேவா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், நிதினின் ‘தம்முடு’ பட டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.