நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (27.06.2025)

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் நாளை (ஜூன் 27-ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
“கண்ணப்பா”
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.
“மார்கன்”
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும், பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“லவ் மேரேஜ்”
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இதில் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
“மா”
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மா’ . விஷால் பியூரியா இயக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரித்துள்ளனர். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“மேகன் 2.0”
ஜெரார்ட் ஜான்ஸ்டோன் எழுதி இயக்கியுள்ள படம் ‘மேகன் 2.0’. இந்த படத்தில் அலிசன் வில்லியம்ஸ், வயலட் மெக்ரா, இவானா சக்னோ மற்றும் ஜெமைன் கிளெமென்ட் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோவை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“எப் 1 தி மூவி”
ஜோசப் கோசின்ஸ்கி இயக்கிய திரைப்படம் ‘எப் 1 தி மூவி’. இப்படம் பார்முலா கார் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக பிராட் பிட் நடித்துள்ளார். மேலும் டாம்சன் இட்ரிஸ், கெர்ரி காண்டன், டோபியாஸ் மென்ஸீஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.