நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (05-09-2025)

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால்தான். அந்தவகையில் நாளை (செப்டம்பர் 5ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மதராஸி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் ருக்மினி வசந்த் , விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் சின்னத்திரை கே.பி.ஒய் பாலா, ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெற்றி மாறன் தயாரிப்பில் வர்ஷா இயக்கத்தில் உருவான ‘பேட் கேர்ள்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள ‘காட்டி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரபல ஆங்கில மொழிப் படமான ‘தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ்’ நாளை வெளியாகிறது. இது கான்ஜுரிங் படங்களில் கடைசி பாகம் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதில் முந்தைய பாகங்களில் நடித்த பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.