‘நாம் சரியான ஆளை பின் தொடர்கிறோமா என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்’- வெற்றிமாறன்

‘நாம் சரியான ஆளை பின் தொடர்கிறோமா என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்’- வெற்றிமாறன்


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

“மனிதன் என்பவன் ஒரு சமூக-அரசியல் விலங்கு என்று கூறுவார்கள். அரசியல் என்றால் வாக்கு அரசியல் மட்டுமல்ல. நாம் யார், நாம் எங்கு இருக்கிறோம்? எப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறொம்? என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி செய்ய வேண்டும்? என்ற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

மாணவர்களாகிய நீங்கள் எதை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நாம் யாரை பின்தொடரப்போகிறோம்?, எதற்காக பின்தொடரப்போகிறோம்? நாம் சரியான ஆளை பின் தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் எது சரி? எது தவறு? எதை செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது? என்பதாவது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

உங்களை சுற்றி நடப்பவற்றை பாருங்கள். நிறைய படியுங்கள், வாசியுங்கள். நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமைகளான மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை சமரசம் செய்து கொள்ளும் வகையில் யாராவது செயல்பட்டால், அத்தகைய நபர்கள் நம்மை தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு, கவனமாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *