நான் பணியாற்றியதிலேயே சிறந்த நடிகர் அவர்தான்

சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தற்போது இவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார், இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனில் துருவ் விக்ரமை அனுபமா பாராட்டினார். தனது வாழ்க்கையில் பல ஆண் கதாபாத்திரங்களுடன் நடித்திருந்தாலும், இவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிக்கும் ஒரு நடிகரை இதுவரை சந்தித்ததில்லை என்றும், இதுவரை தன்னுடன் நடித்த சிறந்த நடிகர் துருவ் என்றும் கூறினார்.