நான் எதற்கும் அடங்காதவள் – நடிகை குஷி முகர்ஜி

பாலிவுட் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர், குஷி முகர்ஜி. சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் உடை அணிந்திருக்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அந்தளவு கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
சமீபகாலமாகவே பொது இடங்களுக்கு உடல் அங்கங்கள் தெரியும்படியாக கண்ணாடி இழையிலான உடைகளை அவர் அணிந்து வருவது, பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் கண்டனம் வலுத்தது. ஆனாலும் நடிகையின் போக்கு மாறவேயில்லையாம். “விமர்சனங்கள் என்னை எதுவும் செய்யாது. என் சுதந்திரத்தில் தலையிடுவதும் எனக்கு பிடிக்காது. எதற்கும் அடங்காதவள் நான். எனவே விமர்சிப்போர் பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூலாக சொல்கிறார்.






