நானியின் "ஹிட் 3" முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

நானியின் "ஹிட் 3" முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு


சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து நானி, ‘ஹிட் 3’ படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

View this post on Instagram

A post shared by Srinidhi Shetty (@srinidhi_shetty)

பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘ஹிட் 3’ படத்தின் முதல் பாடல் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *