நாங்கள் 4-வது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம் – லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு | We are working together for the 4th time

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தின் பின்னணியில் கூலி படத்தின் ரஜினிகாந்தின் கண்கள் திரையில் உள்ளது.