நாக சைதன்யா வெளியிட்ட கவிதை… கொந்தளித்து போன சமந்தாவின் ரசிகர்கள்!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின்னர் சமந்தா படங்களில் பிசியாகி விட்டார். சமீபத்தில் வெளியான “சுபம்” என்ற படத்தை தயாரித்து, அதில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். மேலும் பல பிராண்டுகளுக்கு சமந்தா விளம்பர தூதராகவும் உள்ளார்.
இதற்கிடையில் சோபிதா துலிபாலாவையும், அவருடனான காதலையும் புகழ்ந்து நடிகர் நாக சைதன்யா, ‘அவர் இல்லாமல் நான் இல்லை’ என்ற ரீதியில் கவிதைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதை பார்த்து கொந்தளித்து போன சமந்தாவின் ரசிகர்கள் ஆத்திரத்தில் அவரை வசைபாடி வருகிறார்கள். ‘எங்கள் தலைவிக்கு துரோகம் செய்துவிட்டு எப்படி இப்படி கருத்துகளை பதிவிடலாம்’ என அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.