‘நாகபந்தம்’ படத்தில் இணைந்த ‘புஷ்பா 2’ நடன இயக்குனர்?

சென்னை,
கடந்த ஆண்டு நந்தமுரி கல்யாண் ராம், சம்யுதா மேனன், அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான டெவில் படத்தை இயக்கிய அபிஷேக் நாமா , தற்போது ‘நாகபந்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விராட் கர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை என்ஐகே ஸ்டுடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் ஆகியவற்றின் கீழ் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கிறார். அபே இசையமைக்கும் இப்படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளநிலையில், தற்போது பாடல் காட்சி படமாக்கப்பட்டுவருகிறது. இதற்காக புஷ்பா மற்றும் புஷ்பா 2 பட பாடல்களுக்கு நடன பயிற்சி கொடுத்த பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.