நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள்

சென்னை,
தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” பாலிவுட் படம் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியாகிறது.
தீபாவளிக்கு வெளியாகவிருந்த மோகன்லாலின் அகில இந்திய படமான விருஷபா, நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்பிரெண்ட் படம் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுதீர் பாபுவின் அகில இந்திய படமான ஜடதாரா படமும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது இவரது முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் பொத்தினேனி கதாநாயகனாகவும் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் ஆந்திரா கிங் தாலுகா. இப்படம் நவம்பர் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.
2016-ம் ஆண்டு வெளியான ஜூடோபியாவின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் ஜூடோபியா 2 படம் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.