நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன்- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | If I get a good opportunity, I will definitely act in Tamil

தென்னிந்திய திரைப்பட உலகில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாக்யஸ்ரீ போர்ஸ், தென்னிந்திய சினிமா குறித்து பேசினார். அப்போது, “சினிமாவில் மொழி வேறுபாடு என்பதே கிடையாது. அந்தவகையில் தெலுங்கு தாண்டி தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன். முன்பை விட இப்போது நல்ல கதைக்களங்கள் கொண்ட படங்கள் வருகின்றன. கதாநாயகிகளுக்கும் அடையாளம் கிடைத்து வருகிறது” என்றார்.
இவர் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.