'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்துக்கு நடிகை சமீரா ரெட்டி பாராட்டு

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்துக்கு நடிகை சமீரா ரெட்டி பாராட்டு


சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக சாதாரண ரத்தப் பரிசோதனைகள் தொடங்கி சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும். இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஒரு நோயின் தீவிரத்தை விரைவாக கண்டறிவது மிகவும் அவசியம். அப்போதுதான் சரியான வேளையில் முறையான சிகிச்சை அளிக்க முடியும்.

கிராமப்புற மக்களிடமும் நவீன மருத்துவ சேவை சென்றடையும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பொருளாதார தடையின்றி அனைத்து மக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது” என்று புகழ்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Sameera Reddy (@reddysameera)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *