நம்ம இப்போ எவோல்யூசன்ஷிப்ல இருக்கோம்… வைரலாகும் பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' டீசர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் 2040-ம் ஆண்டில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் Textationship, Situationship, Benching என காதலில் புதுப்புது படிநிலைகளை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘நம்ம இப்போ எவோல்யூசன்ஷிப்ல (Evolutionship) இருக்கோம்’ என்ற வசனம் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் உள்ளது. எல்ஐகே படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






